எங்களூர்........ | 6:06 PM |
Filed under:
|
உழுதுண்டு வாழும் மக்களைக் கொண்டது எங்களூர். விவசாயத்திற்கு ஆற்று நீர் பாசனம் என்னபது குறைவுதான் .முன்பு கிணற்று நீர் பாசனம் நடந்தது.இப்பொழுது ஆழ்குழாய் பாசனம் செய்யப்படுகின்றது.ஆழ்குழாய் என்றால் 50,100 அடிகள் அல்ல 400,500 அடிகளில் தான் தண்ணீர் கிடைக்கும்.ஒரு ஆழ்குழாய் கிணறு தோண்ட வேண்டும் என்றால் குறைந்தது 5,6 இலட்சங்கள் வேண்டும்.இன்று ஆழ்குழாய் கிணறுகள் அதிகமாகிவிட்டன.சில ஆண்டுகளுக்கு முன்பு குடிப்பதற்கே நீர் கிடைப்பது அரிதாக இருக்கும். அப்பொழுது எங்கள் வீட்டில் மட்டும் ஆழ்குழாய் கிணற்றினை அப்பா போட்டிருந்தார்கள். எங்கள் தெருவில் உள்ள மக்கள் பெரும்பாலும் குளிப்பதற்கும் குடிப்பதற்கும் எங்க வீட்டில் உள்ள தண்ணீரையே பயன்படுத்தினர். காலையில் போட்டால் மாலையில் தான் நிறுத்த முடியும்.மக்கள் வரிசையாக வந்துகொண்டே இருப்பார்கள்.எப்பொழுதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.ஆனால் இன்று நிலை மாறி விட்டது .அரசாங்கம் தெரு குழாயினை அமைத்து மக்களுக்கு அதன் மூலம் நீர் வழங்கி வருக்கின்றது.
© 2008 தொட்டில் உறவுகள்
Design by Templates4all
Converted to Blogger Template by BloggerTricks.com | Distributed by Deluxe Templates
0 கருத்துகள்:
கருத்துரையிடுக