எங்களூர்........ 6:06 PM

உழுதுண்டு வாழும் மக்களைக் கொண்டது எங்களூர். விவசாயத்திற்கு ஆற்று நீர் பாசனம் என்னபது குறைவுதான் .முன்பு கிணற்று நீர் பாசனம் நடந்தது.இப்பொழுது ஆழ்குழாய் பாசனம் செய்யப்படுகின்றது.ஆழ்குழாய் என்றால் 50,100 அடிகள் அல்ல 400,500 அடிகளில் தான் தண்ணீர் கிடைக்கும்.ஒரு ஆழ்குழாய் கிணறு தோண்ட வேண்டும் என்றால் குறைந்தது 5,6 இலட்சங்கள் வேண்டும்.இன்று ஆழ்குழாய் கிணறுகள் அதிகமாகிவிட்டன.சில ஆண்டுகளுக்கு முன்பு குடிப்பதற்கே நீர் கிடைப்பது அரிதாக இருக்கும். அப்பொழுது எங்கள் வீட்டில் மட்டும் ஆழ்குழாய் கிணற்றினை அப்பா போட்டிருந்தார்கள். எங்கள் தெருவில் உள்ள மக்கள் பெரும்பாலும் குளிப்பதற்கும் குடிப்பதற்கும் எங்க வீட்டில் உள்ள தண்ணீரையே பயன்படுத்தினர். காலையில் போட்டால் மாலையில் தான் நிறுத்த முடியும்.மக்கள் வரிசையாக வந்துகொண்டே இருப்பார்கள்.எப்பொழுதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.ஆனால் இன்று நிலை மாறி விட்டது .அரசாங்கம் தெரு குழாயினை அமைத்து மக்களுக்கு அதன் மூலம் நீர் வழங்கி வருக்கின்றது.

8:08 PM

வணக்கம் இப்பக்கம் தொடங்கி நீண்ட நாளாகிவிட்டது.எழுதுவதற்கு நேரம் இன்மை தான் காரணம் .எவ்வளோவோ எழுதவேண்டும் என்று தான் இருக்கின்றேன்.

எங்களூர் நெற்களஞ்சிமாகய் திகழ்ந்த தஞ்மை மாநகரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிற்றூர்.

மூலாதாரம் 8:01 PM

மூலாதாரத்தை விட்டு வெகுதூரம்
சென்றவன் மீண்டும்
அத்தொடர்பைத் தேடி
வந்தே தீருவான்

என்ற அடிகளுக்கு ஏற்ப நாம் நம்முனடய
மூலாதாரத்தை விட்டு வெகுதூரம் சென்று கொண்டிருக்கிறோம்.
ஆம் கிராம வாழ்க்கையை நம்மில் பலர் தொலைத்து
விட்டுத் தேடிக்கொண்டிருக்கிறோம்.கிராமத்தில்
பிறந்து, தவழ்ந்து, மண்டியிட்டு, புரண்டு, எழுந்து,
நின்று, நடந்து, திரிந்து, ஒடி, விளையாடி,அதை
சுவாசித்து நேசித்தவர்களுள் நானும் ஒருவள்.

இன்று மறந்தநிலை போன்று நகர வாழ்வில் புதைந்து
போயிருந்தாலும், பிறந்த ஊரின் நினைவு நீருள்ளே
இருக்கும் மீன் இடையிடையே மேலே வந்து
எடிப்பார்ப்பது போல,அப்போது அப்போது எட்டிப்பார்த்துக்
கொண்டே இருக்கும்.அதனுடைய வெளிப்பாடு
என் கிராமத்தைப் பற்றி எழுத முனைந்தது.

ஒக்கநாடு கிழையூர் 2:34 PM

வணக்கம்