மூலாதாரம் PM 8:01

மூலாதாரத்தை விட்டு வெகுதூரம்
சென்றவன் மீண்டும்
அத்தொடர்பைத் தேடி
வந்தே தீருவான்

என்ற அடிகளுக்கு ஏற்ப நாம் நம்முனடய
மூலாதாரத்தை விட்டு வெகுதூரம் சென்று கொண்டிருக்கிறோம்.
ஆம் கிராம வாழ்க்கையை நம்மில் பலர் தொலைத்து
விட்டுத் தேடிக்கொண்டிருக்கிறோம்.கிராமத்தில்
பிறந்து, தவழ்ந்து, மண்டியிட்டு, புரண்டு, எழுந்து,
நின்று, நடந்து, திரிந்து, ஒடி, விளையாடி,அதை
சுவாசித்து நேசித்தவர்களுள் நானும் ஒருவள்.

இன்று மறந்தநிலை போன்று நகர வாழ்வில் புதைந்து
போயிருந்தாலும், பிறந்த ஊரின் நினைவு நீருள்ளே
இருக்கும் மீன் இடையிடையே மேலே வந்து
எடிப்பார்ப்பது போல,அப்போது அப்போது எட்டிப்பார்த்துக்
கொண்டே இருக்கும்.அதனுடைய வெளிப்பாடு
என் கிராமத்தைப் பற்றி எழுத முனைந்தது.

1 கருத்துகள்:

ஆடிப்பாவை சொன்னது…

நல்லது.எழுதுங்கள்...
ஒவ்வொருவருக்கம் இந்த ஏக்கம் உண்டு...